அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் என்ற புதிய நகரம்!
பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழி அறிவிப்பு !
-வீடியோ ஆதாரம் இணைப்பு -
முள்ளிவாய்க்கால் அவலத்தையும் , சிறீலங்காவின் இனப்படுகொலை வடிவங்களையும் , ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை முதல் , சனல் 4 ஆவணம் படம் வரை உலகமெல்லாம் வெளிக்கொண்டு வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு கிராமம் உலக அரசியல் அகராதியில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றது .
இதே வேளை தமிழீழத்தில் தமிழ் பிரதேச நகரங்களின் பெயர்களை சிங்கள வடிவம் கொடுத்து சிதைத்து வருகின்றது சிறீலங்கா . எனினும் சிங்கள அரசு கூட முள்ளி வாய்க்கால் என்ற பெயரை தமிழ் பெயராகவே 17 மே மாதம் 2009 வரை பாவித்து வந்தது ( ரூபவாகினி விடியோ இணைக்கப்பட்டுள்ளது )
நாடுகடந்த அரசின் பிரதமருக்கு உரையை எழுதிக் கொடுக்கும் சிங்கள ஊடுருவல் சக்தி முள்ளிவாய்க்கால் என்பதை முள்ளிய வாய்க்கால் என சிங்களமயமாக்கி கொடுத்துள்ளது . இதனை புரிந்து கொள்ளாத பிரதமரும் முள்ளிய வாய்க்கால் என எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்துள்ளார் . இது தற்செயலாக நடாந்ததாக கருத முடியாது ஏனெனில் இரண்டு தடவைகள் முள்ளிய வாய்க்கால் என இவர் வாசிக்கின்றார் .
மூல வீடியோவை இங்கு அழுத்தியும் , குறித்த பகுதியை கீழே பார்க்கலாம் ,
இதே போல் "நாடுகடந்த அரசு வளர்ச்சி ..." என்பதை சிங்களம் வரட்சி என எழுதிக் கொடுத்தவர் எழுதி இருக்கின்றார் ள , ர விற்கு இடையில் வித்தியாசம் தெரியாத ஒரு சக்தி , முள்ளிவாய்க்கால் என்ற பெயர் தெரியாத ஒரு சக்தி உருதிரகுமாரனுக்கு உரைகளை எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது அல்லது உருத்திரகுமாரன் சுத்த முட்டாளாக இருக்க வேண்டும் .
எதுவாக இருந்தாலும் நாடுகடந்த அரசின் தற்போதைய தலைமை மாற்றப்படவேண்டும் என்பதையே இந்த விடயம் சுட்டி நிற்கின்றது .
இபோழுது உருத்திரகுமாரன் முள்ளியவாய்க்கால் என சிங்கள மயப்படுத்தி வாசிப்பதையும் , வளர்ச்சி என்பதை வரட்சி என வாசிப்பதையும் பாருங்கள் . இவருக்கு இதை எழுதிக் கொடுத்தவர் சிங்களவரா ? அல்லது இது இவரது தவறா ? வீடியோவைக் கேளுங்கள்
ஒரு பிரதமர் தன நாட்டின் வரலாற்று முக்கியமான இடத்தின் பெயரை சரியாக தெரியாமல் இருக்கலாமா ?
ஒரு கட்சியின் வளர்ச்சி என்பதற்கும் வரட்சி என்பதற்கும் எவ்வளவு முரண்பாடு இதனை புரியாதவராக பிரதமர் இருக்கலாமா ?
ஈரானிய அல்லது ஈராக்கிய கிளர்ச்சியின் போது என நம்புகின்றேன் , அமெரிக்க உளவுத்துறை ஆக்கிலத்தில் எழுதிய ஒருவிடயம் அரபு மொழிக்கு மாற்றப்பட்ட பொழுது ஏற்பட்ட தவறு அமெரிக்க சதியை வெளிக் கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குறிப்பிட்ட விடயந்தை ஆதாரத்துடன் தேடி தர முயல்கின்றேன் . தெரிந்தவர்கள் தயவு செய்து தகவல் தரவும் .
மயக்க நிலையின்றி , குழு நிலை மனப்பான்மை இன்றி இனத்தின் நலன் கருதி சிந்தித்தால் TGTE தலைமை மாற்றப்படவேண்டும் என்பது புரியும் .
இவர்கள் என்ன புழுகும் போட்டியா நடத்துகின்றார்கள் . என்ற நிலை உருவாக்கி எமதினம் மானம் கெடும்
முன்னைய காமெடிகள்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- விரைவில் சர்வேந்திரா சில்வா வழக்கு கொமடி தொடர்ச்சி
பிரமாண்டமான தமிழீழ அரச அலுவலகம்
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் .
மனுவில் கையெழுத்திட
http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:
Post a Comment