Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 11 December 2011

உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ? ?POLITICAL SATIRE

 வளங்களை சிதறடிக்காமல் அவறறை சர்வதேச விசாரணை நோக்கி நகர்த்த வேண்டும் !
ஒரு பேப்பருக்காக மௌலி
சிறீலங்கா அரசுமீது சர்வதேச அழுத்தம் என்பதை வைத்து  சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்தி சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை முதன்மை படுத்துவதா? அல்லது அபிவிருத்தி பணிகளை முதன்மை படுத்துவதா?  இதில் எதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு உருத்திரகுமாரனின் பதில் அபிவிருத்தி முதலில் என்பது.  அவர் அவர் சர்வதேச விசரணை பற்றி எதுவும் குறிப்பிடுவதாக் தெரியவில்லை. சிங்களத்துக்கு வசதியான இந்தத் தவறு அவரது அறிவீனமா அல்லது ஒரு திட்டமிட்ட செயலா?

சிறீலங்கா மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் விளக்குகின்றார். அவரது  ஆலோசனையை  குழுநிலை முரண்பாடுகளுக்கு அப்பால் நின்று நாம் பார்த்தல் அவசியம். அதற்கு முன் உங்களிடம் சில கேள்விகள்.

மதம் கொண்ட காட்டு யானை (சிறீலங்கா அரசு) உங்களையும்  உங்கள் சொத்துக்களையும் (தமிழ் மக்கள் அவர்களது உடைமைகள் ) துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. அயலவர்கள் உதவிக்கு ஓடி வருகின்றார்கள் . நீங்கள் அவர்களிடம் எதை எதிர் பார்ப்பீர்கள் ?
அந்த மதம் பிடித்த யானையில் இருந்து உடனடியான மீட்சியையா ? அல்லது உணவு தண்ணீர் , சொத்துகளை மீட்டுக்கொடுத்தல் போன்றவையையா?
இதனை யதார்த்த சூழ் நிலையோடு ஒப்பிட்டு ,சற்று விபரமாக பார்ப்போம் .
சர்வதேச அழுத்தம்  சிறீலங்கா மீது அதிகரித்து வருகின்றது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியாகி இருக்கின்றது . ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியாகி இருக்கின்றது . சனல் 4 ஆவணம் படம் ஏற்கனவே பாரிய தாக்கத்தை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இருக்கின்றது . இரண்டாவது ஆவணப்படம் ஜனவரி நடுப்பகுதியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது .

இவ்வாறு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் நம் என்ன செய்யவேண்டும்  என பிரதமர் அற்புதமாக விளக்கி உள்ளார். அதனை பார்க்க முன் உங்கள் சொந்த மூளையில் என்ன செய்யவேண்டும் என நினைகின்றீர்கள்? சரி எம்  முன் மூன்று வகையான தெரிவுகள் உள்ளன .
அவையாவன ,
·         இந்த அழுத்ததினூடாக முதலில்      சிறையில் உள்ளவர்களை விடுவிக்க  முயல வேண்டும் , பின் பாதிக்கப்பட்டோரின் புனர் நிர்மாண  வேலைகளை செய்ய வேண்டும் , கடைசியாக சர்வதேச விசாரணை ஊடாக சுய நிர்ணய உரிமை , சுதந்திரம் பற்றிப் பேசவேண்டும்.
·         பாதிக்கப்பட்டோரின் நலன்களை முதலிலும் , முகாம்களில் உள்ளோரின் நலன்களை அதன் பின்பும் நிறைவேற்றிய பின் கடைசியாக சர்வதேச விசாரணை ஊடாக சுய நிர்ணய உரிமை , சுதந்திரம் பற்றி பேசவேண்டும.;
·         சர்வதேச விசாரணை ஊடாக இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதன் மூலம் , எமது மக்களின் நிரந்தரமான சுபீட்ச வாழ்வுக்கு சர்வதேச நிதி, நிபுணத்துவ உதவிகளை நேரடியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறைகளை ஏற்படுத்துதல்.

மேலே உள்ள மூன்று தெரிவுகளில் உங்கள் தெரிவு என்ன? முடிவு செய்து விட்டீர்களா?
இப்பொழுது, பிரதமர் அவர்களின் ஆலோசனையை கேளுங்கள். இதன் காணொளிப் பதிவு http://www.youtube.com/watch?v=dcwxX6v7cYY&feature=mfu_in_order&list=ULஎன்ற இணைய முகவரியில் முழுமையாக  உண்டு .
  
அபிவிருத்தி கொமடியில் இது முக்கியமான பகுதி  

ஒளிப்பதிவில் உள்ளபடி, உருத்திரகுமாரன்  குறிப்பிட்ட முதலாவது தெரிவு
·         உயிர்ப்பாக எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களதும் மற்றும் போராளிகளினதும் குடும்பங்களின் மறு வாழ்வும் பொருளாதார மேம்பாடும் குறித்த செயற்பாடுகள் .
·         இரண்டாவதாக தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் செயற்பாடுகள .இவ்விடயங்களில் களமும் புலமும் கைகோர்த்து செயல்படுவது மிகவும் அவசியமானதாகும் . என்கின்றார். அவர் சர்வதேச அழுதங்களினூடாக சுயாதீன விசாரணை என்ற விடயத்தை முற்றாகவே தவிர்த்துக் கொள்கின்றார் .
பக்க சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுமானால் சிறீலங்காவில் இனப்படுகொலை நிகழ்வது அனைவருக்கும் நன்றாகவே தெரியுவரும் . இனப்படுகொலை நிரூபிக்கப்படால், போராளிகள் புனர்வாழ்வு , பொருளாதார அபிவிருத்தி  என்பன மட்டும் அல்ல சுய நிர்ணய உரிமையோடு கூடிய சுதந்திரமும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
தெரிந்தோ தெரியாமலோ உருத்திரகுமாரன் தவறான வழியில் செல்கின்றார் என்பதை இவரது இந்த உரை காட்டி நிற்பதோடு, சர்வதேச சதியின் ஒரு அங்கமாக இவர் குமரன் பத்மநாதன் சிறீலங்காவில் இருப்பது போல் அமெரிக்காவின் பிரகடனப்படுத்தப்படாத 'கைதியாக' உருத்திர குமாரன் உள்ளாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஏனெனில் 50  ஆயிரம் வீடுகளைக் கட்ட இந்தியா முன் வந்த போதும் 50  வீடுகள் கூட கட்டப்படாத நிலையில், ஒரு வருடத்துக்கு மேலாக பத்திற்கு மேற்பட்ட சுற்று பேச்சு வார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்தியபோதிலும், ஆகக்குறைந்தது சிறையில் உள்ள போராளிகளின் பெயர் பட்டியலைக் கூட பெற முடியாத நிலையில். அபிவிருத்தி அல்லது புனர் வாழ்வு  என்பதும் போராளிகளின் விடுதலை என்பதும் நேரடியான சர்வதேச தலையீடின்றி இன்று நடைபெறப் போவதில்லை. இதை நன்கு அறிந்துகொண்டு இவ்வாறு பேசுபவர்கள் ஏமாறுகின்றார்கள் அல்லது தெரிந்தே ஏமாற்றுகின்றார்கள் .

இந்த சர்வதேச தலையீடு என்ற விடயம் இன்னும் ஒரு வருடத்துக்குள் நடைபெறாவிட்டால் அதன் பின் அது ஒரு பொழுதும் சாத்தியமில்லை. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை, சனல் 4  ஆவணப்படம் ஆகியவற்றால் தோற்றுவிக்கப்பட்டள்ள சாதகநிலமை தோற்கடிக்கப்பட்டு நல்லிணக்க ஆணைக்குழு முன் மொழிவு தீர்வாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்க படுமானால்,  அதுவே புலம் பெயர் முள்ளி வாய்க்காலாக அமைந்து விடும் . ஆயுதப் போராட்டம் மவுனிக்கப்பட்டது போல் சர்வதேச ஆதரவு குரலும் மவுனிக்கப்பட்டுவிடும் .

பேச்சு வார்த்தை எனக் காலத்தை கடத்தி எவ்வாறு சிறீலங்கா போருக்கு தயாரானதோ, அதே போல் காலத்தைக் கடத்தி சர்வதேச விசாரணையையும் , ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையையும் தோற்கடிக்க அபிவிருத்தி, ஆணைக்குழு என்ற மாய மான்களை சிறீலங்கா அரசு ஏவி விட்டுள்ளது. எனவே நாம் ஏமாறாமல் சுதந்திரமான  சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் முதன்மை அக்கறை செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து எம்மிடம் உள்ள மனித மற்றும் பண வளங்களை வேறு விடயங்களில் திசை திருப்பி செயல்படுவது தெரிந்தோ தெரியாமலோ புலம் பெயர் முள்ளி வாய்க்காலுக்கு   உடந்தையாக இருப்பதற்குச் சமனானதாகும் .  இதை எதிரி திட்டமிட்டு எம்மை அறியாமல் எமது நிறுவனத்துள் புகுத்தலாம், எனவே சர்வதேச விசாரணை என்ற விடயம் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றில் தோற்கடிக்கப்பட்டால் எமக்கு அதன் பின் தமிழர் பிரச்சனை பற்றி பேசவேண்டிய வாய்ப்பே கிடைக்காது. சிங்களத்தின் கனவும் திட்டமும் அதுதான் . சிங்களத்தின் திட்டமே சர்வதேச விசாரணை என்ற விடயத்தை 2012  இல் தோற்கடிப்பது தான் .
மாற்றம் என்பது ஒவ்வொரு நாடுகளின் ஆட்சி பீடத்தில் ஏற்படவேண்டும். அதை நாம் சரிவர செய்யவில்லை. ஜெனிவா வரும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும் அந்த அந்த நாட்டு அரசுகளின் உத்தரவுகளில் இருந்து மயிரளவு கூட அசைய மாட்டார்கள். ஜெனிவாவில் 22வருடமாக வெள்ளி எண்ணியது போதும். பிரித்தானியாவில் இருக்கும் நாம் அதை இங்கு செய்வோம் .நீ திருந்து உலகம் தானாக திருந்தும்.

பிரித்தானிய அரசிடம் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கோரும் மனு  பிரித்தானிய பிரதமரின் இணையத்தில் உண்டு . அதில் தமிழர்களும் தமிழர் அல்லாதோரும் கையெழுத்து இட வேண்டும் . உங்கள் பெயர் முகவரி பிரித்தானிய அரசுக்கு தெரியும். அதற்கு மேலும் தெரியும் . எனவே கூச்சமின்றி அனைவரும் கையெழுத்து இடுவது அவசியம். பிரித்தானிய பாராளுமன்ற நடைமுறைகளின் படி  ஒரு இலட்சம்   பேருக்கு  மேல் கையெழுத்து இட்டால் பாராளு மன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்பது விதி. அண்மையில் பெற்றோல் விலைக்கு எதிராக ஒரு இலட்சம் பேர் கையெழுத்து இட்டதால் திட்டமிடப்பட்ட பெற்றோல் விலை உயர்வு நிறுத்தப்பட்டது . இப்படி பல ஆதாரங்கள் உண்டு.

மனுவில் கையெழுத்து இட http://epetitions.direct.gov.uk/petitions/14586


மன்னாதி மன்னனின் மற்றைய கொமடிகள் 

  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  5. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  6. விரைவில்  சர்வேந்திரா சில்வா  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  7.  பிரமாண்டமான அலுவலக கொமடி வெளியாகி இருக்கின்றது 
இபோழுது இந்த அபிவிருத்தி கொமடி வெளியாகி இருக்கின்றது 










Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

1 comments:

  1. நீங்கள் இலங்கை அரசுடன் மோதும் நேரத்தைவிட திரு உருதிரகுமாரனுடன் அதிகமாகவோ அல்லது முழு நேரத்தொழிலாகவே கொண்டிருக்காமல் .அவர் செய்யமுயற்சிப்பதில் ஒரு சிறு பகுதியையாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete