![]() |
| இந்த அரசியல் பிரபல Benefit fraud நாம் செய்யக் கூடாது பாருங்கோ !!!!! |
தாம் வாழும் நாட்டை சுயாதீன விசாரணைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற வைக்காமல் ,
ஜெனீவாவில் எல்லாரையும் திரட்ட போறம் எ ண் னுறது பாருங்கோ குழந்த இல்லாமல் பெனிபிட் எடுக்கிற சுத்துமாத்துக்கு சமன் !!!!
உங்களுக்கு இதை போனமுறை ரெலிபோனிலை சொன்னனான் பாருங்கோ இப்ப சந்தியிலை சொல்ல வைச்சிட்டியள் பாருங்கோ !!!!
ஊருக்கை உழாத மாடு சீமையிலை உழாது !!!!
ஒரு இலட்சம் கையெழுத்து விடயத்தை
நடைப் பயணத்தில் ஜெயசங்கர் முன் எடுக்காதது ஏன் ???
ஜெயசங்கர் பாண்ட் வாத்தியக் குழு பதிலளிக்குமா ????
"சமூக கொடுப்பனவுகள் முதல் பல்வேறு விடயங்களில் சுத்துமாத்து செய்பவர்கள் , அரசியல் வாழ்வில் செய்வது அதிசயமல்ல "
சந்திரனில் இருந்து செவ்வாய்க் கிரகத்துக்கு நடைப் பயணம் செய்த ஜெயசங்கர் முருகையா Band Music கடதாசியில் ஒப்பங்களை வாங்கி பிரித்தானிய பிரதமரிடம் சமர்ப்பித்தோம் என கரகம் ஆடியதை அறிவீர்கள் .
கடதாசியில் ஒப்பமிட்ட மனு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே அது கவனத்தில் கொள்ளப்படும் . எனபது பிரித்தானிய அரசின் விதிகளில் முக்கியமானது .
உந்த நாடி விழுந்த அரசின் பாராளுமன்றத்தில்உறுப்பினர் சமர்பித்தால் எதுவும் நடக்காது .
ஒரு இலட்சம் கையெழுத்து விடயத்தை நடைப் பயணத்தில் ஜெயசங்கர் முன் எடுக்காதது ஏன் ???
இந்த விடயம் உண்மையா என நான் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டேன் . அவர்கள் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்கள் . அதன் பிரதியை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன் .
Independent, international investigation into war crimes in Sri Lanka http://epetitions.direct.gov.uk/petitions/14586
எனவே மேலே உள்ள இணையத்தில் உள்ள மனுவில் கையெழுத்திட ஜெயசங்கர் முருகையா பாண்ட் வாத்திய குழு என்ன நடவடிக்கை எடுக்கின்றது ?????
இந்த ஒரு இலட்சம் கையெழுத்து வென்று விடக்கூடாது , சிறீலங்கா மீது சர்வதேச விசாரணைக்கு உலகில் முக்கியமான நாடு தீர்மானித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கருதும் சிறீலங்கா அரசின் ஊடுருவிகளும் , அவர்களால் தெரிந்தோ தெரியாமலோ வழி நடதப்படுபவர்களும் திசை திருப்ப முற்படுகின்றார்கள் . அதில் ஒன்று தானா ஜெயசங்கர் முருகையா பாண்ட் வாத்தியக் குழு ????
மனிதன் தவறு விடுவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு .
- ஆழ்மனக் காயங்களால் ஏற்படும் ஆர்வக் கோளாறு .
- ஆணவம் , கன்மம் , மாயை என்ற மூன்று மலங்களிலே அழிக்க முடியாது என கருதப்படும் ஆணவம் மலம் .
- தெரிந்தோ தெரியாமலோ தீய சக்திகளின் வழி நடத்தலில் போவது .( direct agent and indirect agent )
பேர்மிங்காமில் இருந்து இலண்டனுக்கு நடைப் பயணம் திட்டமிடப்பட்டபோது ஜெயசங்கர் முருகையாவிடம் தொடர்பு கொண்டிருந்தேன் . அவரிடம் சில விடயங்களை சொல்லியிருந்தேன் . அவை அவருக்கு நன்கு தெரிந்திருந்தும் அதே தவறை அவர் மீண்டும்(இலண்டனில் இருந்து ஜெனீவா நடப் பயணம் ) செய்ய திட்டமிடுவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது . அவற்றை விபரமாக பார்ப்போம் .
"சுயாதீன சர்வதேச விசாரணை" என்ற கோசத்துடன் எல்லோரும் கரகம் ஆடுகின்றோம் . காத்திரமான விடயத்தை செய்யாமல் கரகம் ஆடுவதால் பலனில்லை .
ஜெனிவாவில் வாக்களிக்கபோவது
ஒவ்வொரு நாடுகளின் பிரதிநிதிகள் (diplomats ). அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாது .
அவர்களின் அரசு
எவ்வாறு வாக்களிக்க கட்டளை இடுகின்றதோ
அதனை மட்டுமே
அவர்களால் செய்ய முடியும் .
எனவே பிரித்தானியா வாழ் மக்களாகிய நாம்
முதலில்
பிரித்தானிய அரசை சர்வதேச சுயாதீன விசாரணைக்கு
ஆதரவாக தீர்மானம்
இயற்ற வைக்க வேண்டும் .
அதன் ஒரு அங்கம் தான் ஒரு இலட்சம் கையெழுத்து இட்ட மனு .
இதனை வெற்றியடைய செய்யாமல் ஜெனிவாவுக்கு கரகாட்டம் செய்வதில் அர்த்தமில்லை .
பிரித்தானிய அரசின் அரசியல் அமைப்பு நடைமுறைகளின் படி ஒரு இலட்சம் பேர் கையெழுத்து இட்டு மனு சமர்ப்பித்தால் . அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் .
இந்த ஒரு இலட்சம் கையெழுத்து இரு வகைகளில் செய்யலாம் .
- பிரித்தானிய பிரதமரின் இணையத்தில்
- கடதாசியில் கையெழுத்து
கடதாசியில் ஒப்பமிட்ட மனு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே அது கவனத்தில் கொள்ளப்படும் .
உந்த நாடி விழுந்த அரசின் அல்ல பிரித்தானிய பாராளுமன்றத்தில்
இணைய மனு இப்போதைக்கு பொருத்தமானது . அது கீழே உண்டு .
Independent, international investigation into war crimes in Sri Lanka http://epetitions.direct.gov.uk/petitions/14586
அண்மைக்காலங்களில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்வாறு எடுக்கப்பட்ட இரண்டு முக்கியமான விடயங்கள் .
- ஐரோப்பிய ஒன்றிய பொதுசன வாக்கெடுப்பு .
- பெற்றோல் விலை இடை நிறுத்தம்


0 comments:
Post a Comment